பாடல் - 1
வாழ்வின் உயிர்காற்றே வாழ்வின் பொருள் நீயே
தேடும் உறவெல்லாம் காணும் அருள் நீயே
நாடும் மனமெல்லாம் அன்பில் அணைப்பாயே
நான் தொழும் தெய்வமே அன்பே அன்பே அன்பே
1. அன்பு சக்தியே பாதை காட்டுவாய் - 4
2. ஆன்ம சக்தியே '' '' '' '' - 4
3. உண்மை சக்தியே .............
4. உயிரின் சக்தியே ...........
5. ஒளிரும் சக்யதியே ..........
6. நிலைத்த சக்தியே ..............
7. இன்ப சக்தியே ................
8. இயக்கும் சக்தியே ...........
9. நிறைவின் சக்தியே .......................
பாடல் - 2
என் உயிரே இறைவா உன் திருவடி சரணம்
உன் பதம் அமர்ந்து உன் மொழி கேட்க
என்ன தவம் செய்தேன் - நான் - 2
1. உன் முகம் காண் 2. உன் அன்பை சுவைக்க
3. உன் அருள் பெறவே
பாடல் - 3
ஆகாயம் உம்மை புகழ்கின்றதே என் ஆன்மாவும் உம்மை துதிக்கின்றதே - 2
புகழ்கின்றதே உம்மை துதிக்கின்றதே என் தெய்வமே உம்மை துதிக்கின்றதே - 2
1. கதிரவன் உம்மை புகழ்கின்ற வேளை - 2
சிரித்திடும் மலர்களும் புகழ்கின்றதே - 2 (புகழ்கின்றதே ...)
2. சந்திரன் உம்மை புகழ்கின்ற வேளை - 2
தளிர்விடும் கொடிகளும் புகழ்கின்றதே - 2
3. வீண்மீனும் உம்மை புகழ்கின்ற வேளை - 2
மேகங்களும் உம்மை புகழ்கின்றதே - 2
4. குயில்களும் உம்மை புகழ்கின்ற வேளை - 2
மயில்களும் அங்கே ஆடிடுதே - 2
5. வானவர் உம்மை புகழ்கின்ற வேளை - 2
மானுடர் யாம் உம்மை புகழ்வோமே
பாடல் - 4
இனிய நல் இல்லமாய் வாழ்ந்திட மகிழ்ந்திட அருள்புரிவாய் இறைவா -2
1. உள்ளம் நறைந்த அன்பில் இணைந்த வாழ்வு மலர உறவு வளர
2. பகைமை மறந்து பண்பில் சிறந்த குடும்பமாக சேர்ந்து வாழ
3. உலகம் அறிந்த அன்பில் சிறந்த இயேசுவாக பணிகள் புரிய
4. சுகங்கள் மறந்த தியாகம் நிறந்த வாழ்வு சிறக்க மகிழ்வில் திளைக்க
பாடல் - 5
என் விருப்பம் போல அல்ல இறைவா உம் சித்தம் போல் என்னை நடத்தும் - 2
1. குயவனின் கைகளில் மண்போலவே உன் தயவினில் தருகிறேன் கண்பாருமே
2. விழிகளை தந்தது நீரல்லவா உன் விழிகளே அவற்றிற்கு நலமாகும்
3. நாவினை தந்தது நீரல்லவா உன் வாக்கு தான் எனக்கென்றும் செல்வாக்கன்றோ
4. செவிகளை தந்தது நீரல்லவா உம் வேதமே என் வாழ்வின் கீதமன்றோ
5. கைகளை தந்தது நீரல்லவா உன் கருணையே அவற்றிற்கு கடமையன்றோ
6. அறிவினை தந்தது நீரல்லவா உமை அறிவதே எனக்கு நல் பாடமன்றோ
7. ஆவியை என்னிலே நீர் தந்ததால் உம் அபயமே என் வாழ்வின் செபமாகுமே
No comments:
Post a Comment