Search This Blog

Wednesday, November 17, 2010

Anjali


பாடல் - 1
தொழுது தீபம் கொண்டு வாழ்த்துவோம் இறைமகனே நீ ஒளியாகுவாய்
எம்மை மீட்ட இயேசுவே உமக்கு யாம் அளிக்கும் அஞ்சலி
தீபாஞ்சலி - 3
2. தூபம் - வழியாகுவாய் - தூபாஞ்சலி - 3
3. மலர் - மணமாகுவாய் - மலரஞ்சலி - 3

பாடல் - 2
வாருமே - 4 ஆ ..... வாருமே
வாருமே வாருமே வார்த்தையானவனே
பாருமே பாருமே எந்தன் வாழ்வினையே ஆஆ ...
1. தீபத்தை எம் நெஞ்சில் ஏற்றி தினமும் உம்மை வணங்கினோம் - 2
2. தூபத்தை உன் பாதம் வைத்து துதித்து உம்மை வணங்கினோம் - 2
3. மலர்களை எம் கையில் வைத்து மனதால் உம்மை வணங்கினோம் - 2

பாடல் - 3
வார்த்தையான இறைவனுக்கு அஞ்சலி செய்வோம்
வார்த்தையான இறைவனுக்கு தீபத்தாலே அஞ்சலி -2
வாழ்வளிக்கும் வள்ளலுக்கு தூபத்தாலே அஞ்சலி - 2
வழியும் ஒளியும் ஆனவர்க்கு மலர்களாலே அஞ்சலி - 2

பாடல் - 4
மூவொரு இறைவா முதலே முடிவே
முழுமையும் உமக்கே அர்ச்சனையே - 2
1. மலரின் மணமாய் மாநிலமெங்கும்
மறைந்திருப்பாய் நீ மன்னவனே ....
2. தூபத்தின் தூய்மை துலங்க செய்திட
தீமையை சிலுவையில் வென்றவனே
3. ஒளியாய் நெருப்பாய் உள்ளுணர்வாற்றலாய்
உலகெங்கும் நிறைவாய் உள்ளவனே

பாடல் - 5
அஞ்சலி அஞ்சலி
பஞ்ச பூத வடிவத்தாலே மூவொரு இறைவனே அஞ்சலி
எம்மில் வாழும் தேவனே அஞ்சலி
அஞ்சலி - 3
1. நிலம் போல் எம்மை தாங்கி கொள்பவா
நிலத்தால் உமக்கே அஞ்சலி - 2
வளங்கள் அனைத்தும் தோன்ற செய்தவா
உமக்கு தருவேன் நிலத்தால் அஞ்சலி
மணக்கும் மலர்கள் சுவைக்கும் கனிகள்
யாவும் அளித்தவா அஞ்சலி அஞ்சலி - 3
2. நீர்திரளாய் எம்மில் நீர் திரளும் - 2
நீரை எமக்கு வரமாய் அளித்தாய்
உயிரின் ஊற்றே அஞ்சலி
எம்மில் நீரை போன்ற தூய்மை வேண்டும்
உமக்கு படைத்தோம் அஞ்சலி அஞ்சலி - 3
3. நெருப்பை உமக்கு காணிக்கையாக்கினேன்
அன்று நெருப்பு வடிவாய் காட்சி யளித்தவா
நெருப்பு நாவாய் எம்மில் எழுவாய்
அருளின் வடிவே அஞ்சலி
எம்மில் தீமூட்ட வந்தவா
உமக்கு எடுத்தேன் தீபாஞ்சலி அஞ்சலி - 3
4. எங்கள் சுவாசமாய் இருக்கும் இறைவனே
எம்மில் மூச்சு காற்றை ஊதிய தேவனே
தினம் காற்றில் மலர்ந்து உம்மை துதிப்பேன்
காற்றாய் மலர்ந்து உம்மை தொழுவேன்
தூபம் போல எம் செபம் ஏற்பவா
உமக்கு அளிப்பேன் தூபாஞ்சலி அஞ்சலி - 3
5. வானவெளியில் நிறைந்த தெய்வமே
எம்மில் இதய துடிப்பாய் எழுந்த தெய்வமே
உமக்கு இணையாய் என்ன தருவேன் - 2
என்னை நான் கொடுப்பேன் அஞ்சலி
இதோ என்னை கொடுப்பேன் அஞ்சலி அஞ்சலி - 3

No comments:

Post a Comment