பாடல் - 1
இறைவா நீ என்னோடு பேசிட வா
என் இதயம் தங்கிட வா
உனக்காய் நான் என்றும் காத்திருப்பேன்
உன்னையே பாடி மகிழ்ந்திருப்பேன் - 2
1. உன் கரங்களில் என்னை பொறித்தாய்
கண்ணின் மணிபோல் காத்தாய்
மகனாய் மகளாய் ஏற்றாய் - என்
மனதினில் அமைதியை தந்தாய்
என்னில் வந்த சொந்தமாய் நின்றாய்
உன்னில் என்னை இணைத்திட வருவாய்
இறைவா வரம் தருவாய்
2. நிழலாய் என்னை தொடர்ந்தாய்
நினைவினில் நிலையாய் நின்றாய்
நின் கரம் என்னில் தருவாய் - நான்
நிலைத்திட என்னில் வருவாய்
நிறைவாழ்வு என்னில் அருள்வாய்
நிரந்தரமாய் என்னில் இருப்பாய்
இறைவா வரம் தருவாய்
பாடல் - 2
தந்தன தானனா தன தந்தன தானனா
தந்தன தான (தந்தனதான தந்தன தான தந்தன தானனா - 2)
காக்கும் தெய்வமே எம்மை பார்க்கும் தெய்வமே
விடுதலையை விதைத்திடவே விரைந்து வாருமே - 2
ஆஆஆஆஆஆஆஆஆஆ
1. அன்பு ஒன்றே வேதம் என்று எடுத்து சொன்னவனே
பகிர்ந்து வாழ பாருக்கெல்லாம் சொல்லி கொடுத்தவனே - 2
ஏழைகள் அழைக்கிறோம் வாழத்தான் துடிக்கிறோம் - 2
வறுமை அடிமை அகற்றிடவே மண்ணில் வாருமே
2. சுயநலத்தை துறந்து எங்கள் நலம் வளர்த்தவனே
ஒற்றுமையாய் நாங்கள் வாழ வழி வகுத்தவனே - 2
உறவின் நிறைவிலே இதயம் மகிழனும்
குடும்பம் தழைக்கவே தினமும் உழைக்கனும்
பிறரில் பகிர்ந்து கொள்ளும் வரம் எமக்கு தாருமே
పాట - 3
నీ మోము చూడ నా జీవితాశ నీ చెంతనుండ నా ఆశ దేవా
నా ఆశ దీర్చి నన్ను బ్రోచ్చు దేవా - 2
కన్నీట కడిగి క్షమనొసగు నాకు
1. నీ ఇంట చేర నా జీవితాశా - 2
ఇహ బందములను తెగత్రెంచు దేవా
నా ప్రబూనెప్పుటు విడనాడకుండా - 2
వెను వెంబడించ నా ఆశ దేవా
2. ప్రబు కీర్తనలను అంతులేకుండా - 2
గగనమై పాడా నా జీవితాశా
విజయంబుతోడ మోక్షంబు చేరి
నీ ఇంటనుండ నా జీవితాశ
3. నడిప్రద్దు వెలుగు మించు నీ మోము - 2
ఎడ తెగక చూడ నా జీవితాశ
నా ఆశ తీరా నీ మోము చూడ
నా జీవితమును నడిపించు దేవ
பாடல் - 4
*என் இறைவா என் அரசே உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்*
மான்கள் நீரோடை ஆர்வமாய் நாடுதல் போல்
இறைவா என் நெஞ்சம் உம்மை நாடிடுதே - கலை ....
1. அடைக்கலான் குருவிக்கு வீடும் கிடைத்தது
தகைவிலான் குஞ்சுக்கு கூட்டும் கிடைத்தது - 2
அனால் இறைவா என் அரசே - 2
எனக்கோ உன்னிடம் தஞ்சம் கிடைத்தது
எனக்கோ உன்னிடம் தஞ்சம் கிடைத்துள்ளது
2. வறண்ட பாலைக்கு நீரும் கிடைக்கும்
ஏங்கும் நெஞ்சுக்கு வார்த்தையும் கிடைக்கும் - 2
அனால் இறைவா என் உயிரே - 2
நீயின்றி எனக்கு வாழ்வெங்கு கிடைக்கும் - 2
பாடல் -5
ஆனந்த அனுபவமே இறைவா - 2
உன் படைப்பினில் தாராளம் உண்டு என் வாழ்வினில் ஏராளம் உண்டு
ஆனந்த அனுபவமே இறைவா .................
1. உறவினில் உள்ளம் மகிழ்கிறதே ஆனந்த அனுபவமே
என்னுள்ளம் உனக்காய் நெகிழ்கிறதே ஆனந்த அனுபவமே
என்னை மறந்து உந்தன் புகழ் பாடுதே ஆனந்த அனுபவமே
நெஞ்சம் உறுகி என்றும் உனதாகுதே ஆனந்த அனுபவமே
உன்னை பார்ப்பதும் உன்னுடன் இருப்பதும் உன்னில் வாழ்வதும் உனக்காய் இறப்பதும்
2. உழைப்பினில் உள்ளம் காண்பதுவே ஆனந்த அனுபவமே
உண்மைக்கு சாட்சியம் பகர்வதுவே ஆனந்த அனுபவமே
ஏழையின் துன்பம் உணர்வதுவே ஆனந்த அனுபவமே
ஏன் என்று கேள்விகள் கேட்பதுவே ஆனந்த அனுபவமே
மனிதம் வளர்ப்பதும் மகிழ்வை தருவதும் விழிநீர் துடைப்பதும் விலங்குகள் உடைப்பதும்
Hi Admin,
ReplyDeleteCan you please upload the audio song for song no: 4 (என் இறைவா என் அரசே). It will more helpful for us.
Thanks
Any updates about this?
ReplyDelete