Search This Blog

Wednesday, November 17, 2010

Offertory Tamil Songs


பாடல் - 1
அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம்
கனிவோடு ஏற்பாய் ஆண்டவரே - உம்
பலியோடு சேர்ப்பாய் தூயவனே
1. பொன்னான வாழ்வை புடமிட்டு வைதோம்
பூவாக மணம் வீச வைதோம் ஆஆஆ - 2
புதிரான வாழ்வே எதிரானதாலே - 2
பொலிவாக செய்வாய் ஆண்டவனே - உம்
அருளோடு அணைப்பாய் மாபரனே
2. அருளான வாழ்வு இருளானதாலே
திரியாக எமை ஏற்றி வைதோம் ஆஆஆ - 2
திரியாக கருகி மெழுகாக உருகி - 2
பலியாக வைதோம் ஆண்டவனே - உன்
ஒளியாக மாற்றும் தூயவனே


Patlib - Anbodu Vanthom

IRON DJ / DOWNLOAD MP3

பாடல் - 2
இதய காணிக்கை இறவாத காணிக்கை
இறைமனித உறவின் சின்னமாம்
அன்பின் காணிக்கை - 2
இறையே இதை ஏற்றிடுவாய்
உனதாய் எனை மாற்றிடுவாய் - 2
1. மேகங்கள் கூடிடவே வான் மழை அருவியாகுமே
உன் அருளுக்கு சான்றாகுமே - 2
இறைவா உனை போல் வார்த்தையை வாழ்வாக்கி
வழிகாட்டி சென்றிட வரம் ஒன்று தா
2. எண்ணங்கள் உயர்ந்திடவே உள்ளங்கள் கோவிலாகுமே
நம் வாழ்வு அதன் பரிசாகுமே - 2
கருணா உனை போல் மாறாத அன்பினால்
அயலாரை நேசிக்கும் நல் உள்ளம் தா


Patlib - Ithaya Kanikkai

IRON DJ / DOWNLOAD MP3

பாடல் - 3
பலி பீடத்தில் வைத்தேன் என்னை
பாவி என்னை ஏற்றுக்கொள்ளும் - 2
1. நிலையில்லா இந்த பூவுலகில்
நித்தம் உன் பாதையிலே - 2
நின் சித்தம் போல் உம் கரத்தால் - 2
நித்தம் வழி நடத்தும்
2. பரிசுத்தம் இல்லா இவ்வுலகில்
பரிசுத்தமாய் ஜீவிக்க - 2
பரிசுத்தமான உம் இரத்தத்தால் - 2
பரிசுத்தமாக்கிவிடும்


Patlib - Pali Peetathil

IRON DJ / DOWNLOAD MP3

No comments:

Post a Comment