Search This Blog

Wednesday, November 17, 2010

Tamil Communion Songs


பாடல் - 1
அன்பு இன்று உணவானது
பேரின்பம் என்றும் நமதானது - 2
தன்னையே தருகின்ற தெய்வமிங்கே
தரணி அன்பில் வாழுமிங்கே
1. அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள்
ஏனெனில் இது அவர் சரீரம் ஆஆஆ
அனைவரும் இதை வாங்கி பருகுங்கள்
ஏனெனில் இது அவர் திரு இரத்தம்
அவரை உண்டால் என்றும் வாழ்வு
அவரை கண்டால் இல்லை தாழ்வு - 2
ஆமென் - 4
2. உயிருள்ள உணவு இது என்றால்
ஈடுயிணை இனி இதற்குண்டோ ஆஆஆ
உள்ளம் சோர்ந்து போய்விட்டால்
ஊக்கம் தரும் அருமருந்தன்றோ
உயிரின் ஊற்று உள்ளம் வந்தால்
வாழ்வில் கவலை இல்லையன்றோ - 2
ஆமென் .............

பாடல் - 2
உனை பாடும் பொழுதெல்லாம் ஆனந்தமே
என் உள்ளத்தில் எழுகின்ற இறை இயேசுவே
நினைவாக உணவாகி உயிராகியே
நீங்காத நிழலாகும் பேரின்பம் நீ - 2
சபமப கமரிக சரிசநி - 2
சாநி பமபநி சச
சச நிசச நிரிரிரிச நிசநி
சாநி பமபத பப
பம பபபம தத பமக
1. என் தாயின் கருப்பையில் உருவாகும் முன்னாலே
நீதானே என்னை நினைத்தாய் - 2
என் பெயரை உன் கையில் அழியாத நினைவாக
நீதானே பொறித்து வைத்தாய்
எனை விட்டு விலகுவதில்லை நீ
என்னை கைவிடுவதுமில்லை
கண் இமையாக சிறகாலே அணைத்தென்னை காக்கின்ற
உனை பாடும் பொழுதெல்லாம் ......................
பபபத பமகரி சரிசரிநிச
சரிகமப தப மகரி கமப - 2
மபதநிச கரிசநி ரிசநித பதநிச
கரிசநித ரிசநிதப சநிதபம
தபநித சரிநிச
நிசகரி தநிரிநி தபமகரி
ரிரிககமமதத ககமமததநிநி
மமதத நிநிரிரி சநிதப
2. சுமையாலே மனம் சோர்ந்து அழுகின்ற நாளெல்லாம்
ஆறுதல் உன் வார்த்தைகள் - 2
இமை காக்கும் விழிபோல நிதம் சூழ்ந்து எனை காக்கும்
உன் வாழ்க்கை நினைவுகள்
பயணத்தின் பாதைகளில் நான்
பயம் கொண்ட வேளைகளில்
வழி துணையாக துயர் போக்கும்
மருந்தாக வருகின்ற

1 comment:

  1. Nice songs .. DO you know from which album these songs are ?
    Do you have a mp3 version of these songs ?

    ReplyDelete