
பாடல் - 1
நன்றி என்றும் பாடுவேன் என் இதய தெய்வமே
நன்மை செயல்கள் செய்த உந்தன் அன்பை நாடியே - 2
கோடி நன்றி பாட்டு பாடுவேன் காலமெல்லாம் வாழ்த்து கூறுவேன் - 2
1. உயிர்கள் யாவும் வாழ நம் உலகை படைத்ததால்
உறவு வாழ்வில் வளர நம் உள்ளம் உறைந்ததால்
நிஜங்கள் யாவும் நிலைக்க நற்செய்தி தந்ததால்
நிழல்கள் துன்பம் மறைய திருவிருந்தை அளித்ததால்
பகிர்ந்து வாழ்வில் வளர நல் மனதை கொடுத்ததால்
பரமன் அன்பில் வாழ அருள் வரங்கள் பொழிந்ததால்
2. பகிர்ந்து வாழும் அன்பு வாழ்வில் என்னை சேர்த்ததால்
ஜெபித்து நின்று வேண்டும் போது ஜெயத்தை அளித்ததால்
நேச கரம் நீட்டி வந்து நன்மை செய்வதால்
துன்பதுயரை பனியை போல விலக செய்வதால்
உண்மை அன்பில் உள்ளம் என்றும் மகிழ தந்ததால்
உந்தன் ஒளியை உலகின் ஒளியாய் மாற்றம் செய்ததால்
No comments:
Post a Comment