
அன்பான தந்தையே அருள்புரிவாய் இந்நாளில் எங்களை ஆசீர்வதிப்பாய் - 2
1. எங்கள் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவியர் அனைவரும் வளம் பெறவே
கருணையின் உருவே திருவருட்பொருளே கனிவுடன் உம்மை யாம் வேண்டுகிறோம்
திருப்பணி ஓங்க திருச்சபை செழிக்க வேண்டிய வரங்களை பொழிந்தருள்வாய்
அன்பு பணி புரிய அருள் வாழ்வில் நிலைக்க பரமனே உந்தன் அருள் தாராய்
2. யாரிடம் செல்வோம் பரம்பொருளே வாழ்வு தரும் வார்த்தைகள் உம்முடையதே
வார்த்தையாம் இறைவா வழிகாட்டும் தலைவா நீர் பணித்த நெறியில் வாழ செய்யும்
விவிலிய விளக்கை எம் வாழ்வில் ஏற்றி பிறர் இருள் நிலை நீக்கும் வரமருள்வாய்
உலகெங்கும் நற்செய்தி அறிவிக்கும் தூதராய் எம்மை மாற்றி எம்முடன் வழி நடப்பாய்
பரமனே உந்தன் அருள் தாராய்
3. சுமை சுமந்து சோர்ந்துள்ள நெஞ்சம் உம்மில் அடைந்திடும் தஞ்சமே
அமைதியின் அரசே நீதியின் உருவே உலகில் அமைதியை நிலைக்க செய்யும்
சண்டைகள் ஒழிந்து பிணக்குகள் அழிந்து நேர் வழி நின்றிட வரம் தாராய்
அதனால் மண்ணுலகில் விண்ணுலகை அமைக்கும் உம் திட்டம் செயல் பெற வழிவகுப்பாய்
பரமனே உந்தன் அருள் தாராய்
4. வரங்களை பொழியும் நாயகனே எம் பங்குத்தந்தையை நிறைவாய் ஆசீர்வதியும்
எல்லாருக்கும் எல்லாமாக இருக்கும் அருள்வாழ்வில் துணையாக நீரே இருந்தருளும்
வாழ்வில் வளமும் ஆரோக்கியமும் தந்து அருட்பணி சிறக்க வரம் தாரும்
மேற்கொள்ளும் பணிகளில் வெற்றிகள் பல பெற பரமனே உந்தன் அருள் தாராய்
5. இசை என்னும் அமுதில் வெளிப்படும் இறைவா எம் இசை பணி பங்கில் சிறந்திடவே
நாதமானவா தாளமானவா உம் பதம் நாங்கள் சரணடைந்தோம்
எம் பாடல் இறைமக்கள் அனைவரின் மனங்களை உம்மிடம் எழும்ப செய்வதாக
திருஇசை அனைவரின் உள்ளங்களை ஈர்த்து உம்மை சுவைத்திட வழி செய்ய
பரமனே உந்தன் அருள் தாராய்
No comments:
Post a Comment