Search This Blog

Saturday, June 26, 2010

புனித பிலோமினம்மாள்

புனித பிலோமினம்மாள்
(கன்னிகை, வேத சாட்சி)
ஆகஸ்டு: 11
" புனித பிலோமினாவிடம் மன்றாடுங்கள்.
அவரிடம் நீங்கள் கேட்பதையெல்லாம் அடைந்து தருவார்."
(பாப்பரசர் 16ம் கிரகோரியார் )


முதல் மன்றாட்டு:
(முழந்தாளிடவும்)
ஒ மகிமையும் மகத்துவமும் நிறைந்த கன்னிகையே தூய பிலோமினம்மாளே! உம்முன் தாழ்ந்து நிற்கும் எம்மீது கருணை கண் கொண்டு எம் வேண்டுதல்களை பெற்று தாரும்.
பிதாவுக்கும் ...........
துன்பத்தாலும் துயரத்தாலும் துவண்டுள்ள நாங்கள் உம் உதவியை தேடி வந்துள்ளோம். எங்கள் குறைகளை கேட்டு எங்கள் விண்ணப்பங்களை இறைவனிடம் எடுத்து செல்லும்.
பிதாவுக்கும் ...........
எங்கள் கலக்கங்களும் பலவீனங்களும் எங்களை மூழ்கடிகின்றன. நாங்கள் உமது பரிந்துரையை நம்பியுள்ளோம். எம் மேல் இறக்கம் கொண்டு எமக்காக மன்றாடும்.
பிதாவுக்கும் ...........
வீரம் நிறைந்த மறைசாட்சியே எம் பாவங்கள் இறைவனின் கண்முன் எம்மை சிறியவராக்கி எங்களை தண்டனைக்கு உட்படுத்துகின்றன. எங்களுக்கு இறைவனின் மன்னிப்பை பெற்றுத் தாரும். இறை அன்பை கற்றுத் தாரும்.
பிதாவுக்கும் ...........
மிகப்பெரிய புனிதையே எம் இல்லத்தாரை சுற்றத்தாரை கண்ணோக்கும்.
எம் கண்ணீரை துடைத்து உம் விண்ணக மகிழ்வால் எம்மை நிரப்பும்.
எமக்கு இறை அமைதியையும், அன்பையும், நம்பிக்கையையும், உடல் மன ஆரோக்கியத்தையும் பெற்றுத தாரும்.
பிதாவுக்கும் ...........
இறைவனின் அன்பு மகளே நாங்கள் வேண்டி நிற்கும் புண்ணிய பலன்களை அறிந்தவர் நீர். எல்லா வேளையிலும் எம்மோடு இரும். சிறப்பாக எம் இறுதி வேளையில் இறை படிப்பினையில் நிலைத்து நிற்கும் ஆற்றலைத் தாரும். எம்மை பாவத்தின் பிடியிலிருந்தும், தீய ஆக்கினையிலிருந்தும் தப்புவித்து எந்நாளும் இறைவனின் உடனிருப்பை உணர்ந்து வாழும் வரம் தாரும். ஆமென்.
உமது கொடிய உபாதைகளைப் பார்த்து. புனித பிலோமினம்மாளே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். (3)



செபம்
:
புனித பிலோமினம்மளே! வேதசாட்சியான கன்னிகையே! இறைவன் பல புதுமைகளால் உம்மை அணிசெய்தாரே! கிறிஸ்துவின் பிரதிநிதியாகிய பாப்பரசர் உம்மை வாழும் ஜெபமாலைக்கும் மரியாயின் பிள்ளைகளுக்கும் பாதுகாவலியாக நியமித்து உள்ளாரே! உம்முடையதை போன்ற தூய குரல் மறுக்கப்பட முடியாதென்றும், உம்முடைய உதவியில் நம்பிக்கை கொள்வதற்கு எங்களுக்கு உரிமை உள்ளதென்றும் மோட்சத்திலிருந்து தெளிவாக எங்களுக்கு காண்பியும். இயேசு கிறிஸ்துவுக்கு மரணத்திலும் பிரமாணிக்கமாயிருக்கும் அருளை எங்களுக்கும் பெற்றுத்தாரும். நாங்கள் கேட்கின்ற இந்த சிறப்பு மன்றாட்டையும் ................................ எங்களுக்கு அருள்வீராக. ஆமென்.

இக்கன்னிகையின் சிறப்பு:
கன்னியும் வேதசாட்சியுமான புனித பிலோமினம்மாளின் புனித அருளிக்கங்கள் உரோமை சுரங்க கல்லறைக்குள் 1500 ஆண்டுகள் மறைவுக்கு பின் 1802ம் ஆண்டு மீ மாதம் 24ம் தேதி கிறிஸ்தவர்களின் சகாய மாதா திருநாளன்று கண்டெடுக்கப்பட்டன. முப்பத்தைந்து ஆண்டுகளுக்குள் இந்த கிரேக்க அரச குமாரி புனிதை பட்டமளிக்கப்பட்டார். 19ம் நூற்றாண்டின் புதுமை வர்த்தி என்று போற்றப்பட்டாள். இத்தனை வல்ல புதுமைகள் இவருடைய மன்றாட்டால் நடந்தன. புனித பிலோமினா கடவுளிடம் வல்லமை பெற்றிருந்தாள்.

தனிச்சிறப்பு:
இப்புனிதை நம் எல்லா தேவைகளிலும் உதவி செய்ய வரம் பெற்றுள்ளார். ஞான உதவிகளையும், உலக உதவிகளையும் அவர் செய்கிறார். பெரும் நம்பிக்கையுடனும், அன்புடனும் விசுவாசத்துடனும் நாம் அவரை அணுகி செல்வோமாக! அவர் இயேசுவுக்கும் மாதாவுக்கும் பிரியமுள்ள மகளாயிருக்கிறார். அவருக்கு எதுவும் மறுக்கப்படுவதில்லை.
"என் பிள்ளைகளே! புந்த பிலோமினம்மாள் பெரும் வல்லமை படைத்தவர். அவர் வீர வைராக்கியமாக மறைசாட்சி முடியை ஏற்று க்கொண்டதால், அவரிடம் விளங்கிய தூய கற்பாலும், தாராள குணத்தாலும் எந்த அளவுக்கு அவர் கடவுளால் அன்பு செய்யப்பட்டார் என்றால், நமக்காக அவரிடம் எதை கேட்டாலும் கடவுள் அதை மறுக்கமாட்டார்" என்றுரைக்கிறார் புனித ஜான் மரிய வியான்னி.
பாப்பரசர் 13 ம் சிங்கராயர் புனித பிலோமினாவை " மிகப் பெரிய புனிதை" என்று கூறுகிறார்.
முத்திபேறு பெற்ற பவுலின் ஜாரிகோ " பிலோமினம்மாள் என்னும் இப்புனிதையிடம் நம்பிக்கை வையுங்கள். நீங்கள் கேட்பதையெல்லாம் தருவார்" என்கிறாள்.
ஒரு பேயோட்டும் நிகழ்வில் பிசாசுகள் இவ்வாறு கூறியுள்ளன: " எங்களுடைய சபிக்கப்பட்ட எதிரி இப்பெரிய கன்னி வேதசாட்சி பிலோமினா தான். அவர் மேல் ஏற்பட்டு வருகிற பக்தி நரகத்திற்கே ஒரு பயங்கரமான புதுப்போராட்டமாக இருக்கிறது.
( புனித ஜான் மரிய வியான்னியால் இயற்றப்பட்டது)

புனித பிலோமினம்மால் ஜெபமாலை:

விசுவாச பிரமாணம்
(3)
கர்த்தர் கற்பித்த செபம்
(13) புனித பிலோமினம்மாளே! எங்கள் இனிய பாதுகாவலியே வாழ்க!
எமக்கு துணையாய் இருந்து இபோழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்.
புனித பிலோமினம்மாளே! இயேசு மரியின் அன்பு செல்வியே உம்மை நாடிவரும் எங்களுக்காக மன்றாடும்.
ஆமென்
(1)பிதாவுக்கும் ........

புனித
பிலோமினம்மாள் மன்றாட்டு மாலை:

ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை கனிவாக கேட்டருளும்
விண்ணக தந்தை இறைவா - எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தை மீட்ட சுதன் தேவா ........
தூய ஆவியாகிய இறைவா .........
தூய மூவொரு இறைவா .........
கன்னியர்களின் அரசியான புனித மரியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித பிலோமினம்மளே!...
பிறப்பிலிருந்தே பல நன்மைகளால் நிரப்பப்பட்ட புனித பிலோமினம்மளே!...
கன்னிமரியாயை உத்தம விதமாக கண்டு பாவித்த புனித பிலோமினம்மளே!...
கன்னியரின் முன்மாதிரியான புனித பிலோமினம்மளே!...
மிகுந் தாழ்ச்சியின் கூடமான புனித பிலோமினம்மளே!...
கடவுளின் மகிமைக்காக பற்றி எரியும் ஆவல் கொண்ட புனித பிலோமினம்மளே!...
இயேசுவின் அன்புக்கு பலியான புனித பிலோமினம்மளே!...
திடத்திற்கும் நீடித்து நிலைத்தலுக்கும் முன்மாதிரியான புனித பிலோமினம்மளே!...
தூய கற்பின் வெல்லமுடியாத வீர புதல்வியான புனித பிலோமினம்மளே!... வீரவைராக்கியமான புண்ணியங்களின் பிரதிபலிப்பான புனித பிலோமினம்மளே!...
துன்பங்களின் நடுவே துணிச்சலும் உறுதியும் கொண்டவரான புனித பிலோமினம்மளே!...
உம்முடைய மணாளனைப்போல் கசையால் அடிக்கப்பட்ட புனித பிலோமினம்மளே!...
அம்பு மழையால் குத்தி துளைக்கப்பட்ட புனித பிலோமினம்மளே!...
விலங்கிடப்பட்டிருக்கையில் கடவுளின் தாயால் ஆறுதல் கூறப்பட்ட புனித பிலோமினம்மளே!...
சிறைசாலையில் அற்புதமாய் குணமாக்கப்பட்ட புனித பிலோமினம்மளே!...
உம்முடைய வாதைகளிலே வானதூதர்களால் தேற்றப்பட்ட புனித பிலோமினம்மளே!...
அரச சிம்மாசனத்தின் மாட்சியைவிட கொடிய வேதனைகளையும் மரணத்தையும் தெரிந்து கொண்ட புனித பிலோமினம்மளே!...
உம்முடைய வேதசாட்சியத்தை கண்டவர்களை மனந்திருப்பின புனித பிலோமினம்மளே!...
உம்மை கொலை செய்தவர்களின் கோபத்தை சலிப்புற செய்த புனித பிலோமினம்மளே!...
மாசற்றவர்களின் பாதுகாவலியான புனித பிலோமினம்மளே!...
இளைஞகளின் பாதுகாவலியான புனித பிலோமினம்மளே!...
நிர்பாக்கியர்களின் அடைக்கலமான புனித பிலோமினம்மளே!...
நோயாளிகளுக்கும் பலவீனர்களுக்கும் ஆரோக்கியமான புனித பிலோமினம்மளே!...
போராடும் திருச்சபையின் புதிய ஒளியான புனித பிலோமினம்மளே!...
உலகத்தின் அவநம்பிக்கையை வெட்கமுற செய்பவரான புனித பிலோமினம்மளே!...
விசுவாசிகளின் விசுவாசத்தையும் தைரியத்தையும் தூண்டி எழுப்புகிரவரான
உம்முடைய பெயர் மோட்சத்தில் மகிமைபடுத்தப்படவும், நரகத்தில் அஞ்சப்படவும் வரம் பெற்ற புனித பிலோமினம்மளே!...
மிகவும் சிறந்த புண்ணியங்களால் புகழ் பெற்ற புனித பிலோமினம்மளே!...
மரியன்னையின் பிள்ளைகளின் பாதுகாவலியான புனித பிலோமினம்மளே!...
வாழும் செபமாலைக்கு பாதுகாவலியான புனித பிலோமினம்மளே!...
உலகின் பாவங்களை போக்கும் இறைவனின் செம்மறியே
  1. எங்கள் பாவங்களை போக்கியருளும்
  2. எங்கள் மன்றாட்டை கேட்டருளும்
  3. எங்கள் மேல் இரக்கமாயிரும்
இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி
புனித பிலோமினம்மாளே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
செபிப்போமாக்:
எங்கள் ஆண்டவராகிய இறைவா! தனது உன்னதமான வாழ்வாலும் தூய நடத்தையாலும் உமது பார்வையில் எப்போதும் பிரியமுள்ளவராய் இருக்கின்ற கன்னியும் மறைசாட்சியுமான புனித பிலோமினம்மாளின் வேண்டுதலால் எங்கள் பாவங்களை மன்னித்து எங்களுக்கு தேவையாய் இருக்கின்ற அனைத்து உதவிகளையும் தந்தருளும்படி எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

நவநாள் ஜெபம்:
ஓ மகாபெரிய புனித பிலோமினம்மாளே! கன்னிகையான வேதசாட்சியே! எங்கள் காலங்களின் புதுமை வரத்தியே! எங்களுக்கு ஆன்ம சரிர தூய்மையையும் நினைவிலும் செயலிலும் புனிதத்தையும் பெற்றுத்தாரும். மிகுதியான வேதனையின் நடுவிலும் நீர் அனுபவித்த பொறுமையினால் கடவுள் எமக்கு சித்தம் கொள்ளும் அனைத்து துன்பங்களையும் பணிவுடன் ஏற்றுக்கொள்ளும் வரத்தை பெற்றுத்தாரும். உம்மை வதைத்தவனின் கட்டளையால் நீர் எறியப்பட்ட தைபர் நதியிலிருந்து சேதமின்றி அற்புதமாய் தப்பித்தது போல, எங்கள் வாழ்வு என்னும் கடலில் எம் ஆத்துமத்திற்கு சேதமின்றி தப்ப உதவி புரியும். இந்த உபகாரங்களுடன் ஓ இயேசுவின் நேச பத்தினியே! நாங்கள் ஆர்வமுடன் இப்பொழுது எடுத்துக்கூறும் வேண்டுதலையும் கேட்டருளும்படி மன்றாடுகிறோம்.
தூய்மையுள்ள கன்னிகையே! மறைசாட்சியே! மோட்சத்தில் இருந்து ஒரு இரக்க பார்வையை உம பிரமாணிக்கமுள்ள ஊழியர் மீது பொழிவீராக. எங்கள் துயரத்தில் எங்களுக்கு ஆறுதலாய் இருப்பீராக. ஆபத்தில் எங்களை காப்பாற்றும். அனைத்திற்கும் மேலாக எமது மரண வேளையில் எங்களுக்கு உதவியாக வாரும். கடவுளின் திருச்சபையை காத்தருளும். அதன் உயர்வுக்காகவும் வளர்ச்சிக்காகவும் மன்றாடும். விசுவாசம் விரிந்து பரவும்படியாகவும், பாப்பரசருக்காகவும், தேவ ஊழியர்களுக்காகவும் நீதிமான்கள் நீடித்து நிலைக்கும்படியாகவும், பாவிகள் மனந்திரும்பும்படியாகவும், உத்தரிக்கிற ஆன்மாக்கள் சிறப்பாக நான் நேசிக்கிறவர்கள் ஆறுதல் பெறவும் வேண்டிக்கொள்ளும்.
ஒ பெரிய புனிதையே! உம் வெற்றியை பூமியில் நாங்கள் கொண்டாடுகின்றோம். உமக்கு மோட்சத்தில் சூட்டப்பட்ட மகிமையின் மகுடத்தை நாங்களும் ஒரு நாள் தரிசிக்க தயைபுரியும். இறைவன் தம்முடைய அன்பிற்காக இவ்வுலக வாழ்வில் வேதனைகளை நித்திய வேகுமானத்தால் தாராளமாய் சன்மானிக்கிறார். அவரை முடிவில்லாமல் வாழ்த்த எமக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.

இறுதி செபம்:
மகிமை பொருந்திய புனித பிலோமினம்மாளே! இறைவன் தமது நித்திய வல்லமையால் இந்த நிர்பாக்கிய நாட்களில் கிறிஸ்தவர்களுடைய ஆன்மாக்கள் புதுப்பிக்கப்படவும், நம்பிக்கை காக்கப்படவும், இறை அன்பு தூண்டப்படவும் உம்மை இந்த உலகிற்கு வெளிப்படுத்தினாரே! உமது பாதத்தில் விழுந்து கிடக்கின்ற எம்மை பாரும். நன்மைதனமும் கருணையும் நிறைந்த கன்னியே! எங்கள் மன்றாட்டுக்களை ஏற்க தயை புரியும். உலக கவர்ச்சிமிக்க இன்பங்களை நீர் பலியாக்க செய்த உம்முடைய தூய்மையையும், உமக்கேதிரான கொடிய தாக்குதல்களையும் எதிர்த்து நிற்க செய்த ஆன்ம வலிமையையும் உம்முடைய பயங்கரமான உபாதைகளையும் அழிக்க முடியாத உம்முடைய ஆர்வமிக்க இறை அன்பையும் எமக்கும் அடைந்து தாரும். இவ்விதமாய் உம்முடைய புனிதத்தை கண்டு பாவித்து ஒரு நாள் உம்மோடே நாங்களும் மோட்சத்தில் முடி பெறுவோமாக. ஆமென்.

No comments:

Post a Comment