
அருள்மழை பொழியும் கடற்கரை சகாய தாயே. துன்பப்படுவோரின் துயர் துடைக்கும் தயைமிகு தாயே. இதோ அசைக்க முடியாத முழு நம்பிக்கையுடன் உமது திருத்தலத்தில் கூடியுள்ளோம். உமது வல்லமையுள்ள மன்றாட்டால் எங்களை காத்தருளும். நாங்கள் எவ்வித தவறிலும், கேட்டிலும் விழாதபடி எங்களைக் கரம்பிடித்து வழிநடத்தும் தாயே! அன்று எங்கள் ஆலயத்தையும் எம் பகுதியையும் காப்பாற்ற வேண்டி நீர் வீற்றிருந்த கெபியை கடலுக்கு காணிக்கையாக்கிய கடற்கரை சகாய தாயே எங்களைக் காத்தருளும். சுனாமி காலத்தில் பொங்கி எழுந்த கடலின் சீற்றத்திலிருந்து எங்களை காப்பாற்றிய கருணைத்தாயே எங்கள் மன்றாட்டை இறை இயேசுவிடம் எடுத்து செல்லும். துன்ப துயரங்களில் இருந்து எங்களை காப்பாற்றும். தீராத வியாதி வருத்தங்களில் இருந்து எங்களை விடுவித்தருளும். வறுமையில் வாழும் எங்கள் வாழ்வை வளமாக்கும். எங்களுக்கு சமாதானத்தை தந்தருளும். ஆமென்
கடற்கரை சகாயமாதா ஆலயம்
50, எண்ணூர் பீச்ரோடு, பாரதியார் நகர், சென்னை - 600 057.
No comments:
Post a Comment